Thursday 13 November 2014

ரமணஜோதி 13

ரமணஜோதி 13  

ஏகமும் அனேகமும்


எனையழித் திப்போ தெனைக்கல வாவிடி
லிதுவோ வாண்மை யருணாசலா

நாயகி-நாயக பாவத்தில் இந்த ஈரடிகள் இயற்றப் பட்டுள்ளது. நாயகி நாயகனிடம் இறைஞ்சுகிறாள்,  நீ இப்போது வந்து என்னை யாட்க்கொள்ளாவிட்டால் நான் மிகுந்த துன்பத்திற்கு ஆளாகிவ்டுவேன். நீ என்னை ஆட்க்கொள்ளாவிட்டால் உன் ஆண்மையை இந்த உலகம் பழிக்கும்.

ஜீவான்மா பரமான்மாவிடம் கலப்பது இயற்கை.ஜிவான்மாவின் அந்த வேழ்க்கை இயற்கையானது.அதை நிறைவேற்ற வேண்டியது பிரமனின் கடைமை.

ஆண்-பெண் கல்வியேற்ப்படும்போது இருவரும் இரண்டற கலந்து விடுகிறார்கள்.
உண்ணும்போதும் உறங்கும்போதும் மற்ற எந்த ஒரு கர்மத்தில் ஈடுபடும்போதும் மனித மனம் அந்த கர்மத்திலிருந்து விலகி வேறு பலதையும் சிந்திக்கும். ஆனால் ஆண்-பெண் கலவியில் மட்டும் வேறு சிந்தனை ஏற்படாது..
அது போல் ஜீவான்மா பரமான்மா ஒருமிக்கும்போதும் வேறு சிந்தனை ஏற்ப்பட முடியாது.
ஒரே ஒரு வித்தியாசம்- நோக்கத்தில் மட்டும் தான். சிற்றின்ப நாட்டமும் பேரின்ப நாட்டமும் ஒரே போல் இருந்தாலும் பரமாத்மாவுடன் ஐக்கியமாகிவிட்ட ஜீவாத்மாவிற்கு மற்ற ஆசா பாசங்கள் எதுவும் ஏற்படாது.. எல்லாவற்றிலிருந்தும் முக்தனாகிவிடுகிறான். சிற்றின்பத்திலீடுபடுகிறவன் மற்ற இந்திரிய ஜனிதமான ஆசாபாசங்களிலிரிந்து விடுதலை பெறுவதில்லை. கடலில் உண்டாகின்ற சுழலில் அகப்பட்ட கப்பல் போல் அதிலேயே உழலுகிறான். இந்த இகலோக வாழக்கைக்கே உரித்தான கோப தாபங்களுக்கும் போட்டி பொறாமைகளுக்கும் ஆளாகிறான்.
முன்னது காமிய கர்மம்; பின்னது நிஷ்காமிய கர்மம்.
காமிய கர்மத்தை ஊக்கத்துடன் செய்கிறவன் களைத்துப் போய் நன்றாக உறங்குவான். அந்த உறக்கத்திலிருந்து திரும்பவும் விழித்து எழுந்து விடுவான். அவனது  பழைய நினைவுகள் கவலைகள். ஆசா பாசங்கள் எல்லாம் அவனை மறுபடியும் பிடித்துக்கொள்ளும்.
நிஷ்காமிய கர்மம் செய்கிறவன் களைப்பதும் இல்லை, மறுபடியும் விழிப்பதும் இல்லை. அவனுக்கு நித்ய முக்தி கிடைக்கிறது.
நிஷ்காமிய கர்மத்தால் மனம் தெளிவடைகிறது.
மனத்தெளிவு என்பதும் சித்த சுத்தி என்பதும் ஒன்றே. சித்த சுத்தியிலிருந்து ஒற்றுமை,சமத்துவம்,உண்மை,ஒழுக்கம்,உறுதி,அஹிம்சை நேர்மை,போன்ற நற்குணங்களுக்கு அவன் உரித்தாகிறான்.
நிஷ்கமிய கர்மம் அனுஷ்டிப்பவனுக்கு சப்தம்,ஸ்பரிசம் முதலிய இந்திரியங்கள் சம்பந்தப் பட்ட எந்த பாதிப்பும் இல்லை.
அவன் மனதில் எந்த விதமான கற்பனைகளும் உதிப்பதும் இல்லை.அவன் மனம் அலைகள் இல்லாத கடல் போல் சாந்தமாக  இருக்கும்.
உபதேச வுந்தியாரில் பகவான் கூறுகிறார்-

கன்மம் பயன்றரல் கர்த்தன தாணையாற்
கன்மங் கடவுளோ வுந்தீபற
கன்மஞ் சடமதா லுந்தீபற
                உ.உ 1
கர்மங்கள் நமக்கு முக்தியை தராது, ஏனென்றால் கர்மங்கள் முன்னாலேயே பிரமனால் நிச்சயிக்கப் பட்டவை.. அவை ஜடம்
ஆனால்
வினையின் விளைவு விளிவுற்று வித்தாய்
வினைக்கடல் வீழ்த்திடு முந்தீபற
வீடு தரலிலை யுந்தீபற
                     உ.உ.2
கர்மங்கள் ஜடமாகயிருந்த்தும் அவையிருந்திலிருந்து விழக் கூடிய விதைகள் வேறு பல ஆசா பாசங்களை கிளப்பிவிடுவதால் முக்தி நல்கா.
பகவான் இங்கே கர்மங்கள் என்று கூறுவது காமிய கர்மங்களையே.

கருத்தனுக் கக்குநிட் காமிய கன்மங்
கருத்தைத் திருத்தியஃ துந்தீபற
கதிவழி காண்பிக்கு முந்தீபற

ஆனால் பலனை எதிர்பார்க்காமல் அந்த அருணாசலேஸ்வரனை மட்டும் நினைத்து செய்யும் கர்மங்கள் நமக்கு அருணாசலேஸ்வரனை நெருங்குவதற்க்கு வழி காண்பிக்கும். ஏனென்றால் அப்படிப்பட்ட நிஷ்காமிய கர்மங்கள் மனதை சுத்தப் படுத்தி ஏனைய உலக ரீதியான இஷ்யானிஷ்டங்களிலிருந்து விடுதலையளிக்கும்..
நிஷ்காமிய கர்மங்கள் முக்தியை நேரடியாக நல்காவிட்டாலும் ஜீவன்மா பரமனில் லயிப்பதற்கான முதல் படி என்கிறார் ரமணர்..ஆகவே நிஷ்காமிய கர்மங்கள் பக்தியின் முதல் படி.
https://ssl.gstatic.com/ui/v1/icons/mail/images/cleardot.gif


No comments:

Post a Comment