Thursday 6 November 2014

ரமணஜோதி 11

ரமணஜோதி

அத்தியாயம் 11

இதயம்-இறைவனின் ஆலயம்

மனம் ஆசைகளின் ஒரு கூடரம்.கீதையில் கூறியிருப்பதுபோல்,பொறிகள் புலங்களிடத்தில் ஒன்றுபடுவதால் நாம் இன்ப்-துன்பத்தை இந்த இக வாழ்வில் அனுபவிக்கிறோம்.ஆனால் இந்த இந்திரிய ஜனிதமான இன்ப-துன்பங்கள் தாற்காலிகமானவை.
அவை நிரந்தரமன்று. ஒரு நேரத்தில் இன்பமாக தோன்றுவது இன்னொரு நேரத்தில் துன்பமாக படுகிறது.ஆகையால் அவை அனைத்தும் அனித்தியமானவை. ஜீவாத்மாவும் அப்படியே.
ஆனால் பரமாத்மா வசிக்கின்ற இதயமோ புனிதமானது; கறை படியாதது; நித்தியமானது.
அந்த பரமனால் மட்டுமே நமது ஜீவாத்மாவை இந்த ஆசா பாசங்களிலிருந்து விடுவித்து அவனது வாசஸ்தானமான அந்த குகைக்குள் கொண்டு செல்ல முடியும்.
நமது முயற்சி இருந்தால்,.அவன் அதை எந்த எதிர் பார்ப்பும் இல்லாமல் செய்வன்
இதை மனதில்க் கொண்டு பகவான் ரமணர் சொல்கிறார்:

அகம்புகுந் தீர்த்துன் னககுகை சிறையா
யமர்வித்த தென்கொ லருணாசலா 


என்னுள்ளே புகுந்து என்னை சிறை பிடித்து உன்னுடைய இதய குகைக்குள் எதற்காக வைத்தாய்?
பகவான் ரமணர் தெரியாமல் இதை கேட்கவில்லை.அவருக்குத் தெரியும் பரமன் எந்த எதிர்பர்ப்பும் இல்லாமல் இதை செய்கிறான் என்று.
பகவான் சூசகமாக உணர்த்த விரும்புவது என்ன்வென்றால்
இந்திரியங்கள் உடலை விட சூக்ஷ்மமானது.உடலை இயக்கி வைக்கின்றவையே அவை தான்.
ஆனால் மனமோ இந்திரியங்களை விட வலிமையானது.
மனதால் பலவிதமாக கற்பனை செய்ய முடியும்.
இல்லாததை உள்ளதாகவும் உள்ளதை இல்லாததாகவும் கற்பனை செய்கிறது.
கயிறை பம்பாகவும் முத்துச்சிப்பியை வெள்ளியாகவும் கட்சியளிக்க செய்கிற்து.
இந்த மனதை விட புத்தி இன்னும் வலிமையானது.
ஆனால் புத்தியால் கூட ஆன்மாவை அடையாளம் காணமுடியாது.
ஆசாபாசங்களும் கோபதாபங்களும் ஆன்மாவை மறைக்கின்றன.
பழத்தின் தோலை உரிப்பது போல நாம் ஒவ்வொரு தோலாக இந்திரியங்களால் படைக்கப்பட்ட ஆசா பாசங்கலைத் துறந்து மனம் புத்தி இவைகளின் கட்டுப்பாட்டிலிருந்து விடு பட்டால்த் தான் சூக்ஷ்மமான ஆன்மாவை அடையளம் காணமுடியும்.

தாண்டவராயன் பிள்ளை கைவல்ய நவ நீதத்தில் சொல்கிறார்:

என்னுடை மனது புத்தி யின்திய சரீர மெல்லா
மென்னுடை யறிவினாலே யிரவிமுன் னிமமேயாக்கி
யென்னுடை நீயு நானு மேகன்றைக்யங்செய்ய

கதிரவனைக் கண்ட பனிபோல் என்னுடைய மனது ,புத்தி இந்திரியங்கள் எல்லாம் மறைந்து போக நீயும்  நானும் ஒன்றே என்று ஆக்கி அருள் செய்வாயாக.
இதையேதான் பகவான் வேறு வார்த்தைகளில் கூறுகிறார்.
என்னுடைய் உள்ளத்தில் புகுந்து நீ என்னுடைய ஆசாபாசங்களையெல்லாம் அழித்து என்னை சிறை செய்து உன்னுடன் ஐக்கியமக்கிக்  கொண்டாய்,அருணாசலா.என்று.
நாம் இந்த நேரத்தில் பகவன் ரமணர் மதுரையிலிருந்து திரு அருணை வந்து பதினேழு வருடம் ஒம்கார வடிவமான விரூபாக்ஷ குகையில் தவமிருந்தார் நினைவுகூர வேண்டும்.
https://ssl.gstatic.com/ui/v1/icons/mail/images/cleardot.gif


No comments:

Post a Comment