Thursday 13 November 2014

ரமணஜொதி 14

ரமணஜோதி14

மனம் ஒரு குரங்கு


உனையே மாற்றி யோடா  துளத்தின்மே
லுறுதியா யிருப்பா யருணாசலா

ஊர்சுற்றூளம்விடா துனைக்கண் டடங்கிட
வுன்னழ கைக்காட் டருணாசலா

மனத்தின் இயக்கம் ஒரு விசித்திரமானது.அது தன்னையே ஏமாற்றிக்கொள்வதில் மிகவும் திறமை வாய்ந்தது..மனத்தை இயக்குவது இந்திரியங்கள்..இந்திரியங்களால் இயக்கப்படுகின்ற மனம் ஒரே நேரத்தில் பல திசைகளில் சஞ்சரிக்ககூடியது.
மன அடக்கம் என்பது மிகவும் கடினமான ஒரு காரியம்.
ஒரு தமிழ் புலவர் கூறினார், மனத்தை அடக்குவதை விட எளிது தண்ணீரில் நடப்பதும் நெருப்பின் மீது உட்காருவதும்.

பகவத் கீதையில் கிருஷ்ண பகவான் அர்ஜுனனிடம் கூறுவார்,,மனத்தை அடக்க முயல்வதும் காற்றை தடுத்து நிறுத்த முயல்வது ஒரு போல்த் தான்.
கபிலன் சிவபெருமானிடம் ஒருமுறை கூறினாராம், இந்த மனத்தை என்னிடமிருந்து எடுத்துக் கொள்ளுங்கள்;அதை பக்தி என்கின்ற கயிறால் கட்டிப் போட்டு விடுங்கள்.
அதே போல் பகவான் ரமணர் அருணாசலரிடம் தன் உள்ளத்தில் உறுதியாக உட்கார்ந்து விடக் கூறுகிறார்.
அப்படி என் மனம் எங்கேயாவது அலைந்து திரிய முற்பட்டால்,அருணாசலா நீ உன் அழகை காட்டி கட்டிப் போட்டு விடு.
க்ரோதத்பவதி சம்மோஹ்ஃ சம்மோஹாத்ஸ்ம்ருதிவிப்ரம்ஃ
ஸ்ம்ருதிப்ர்ம்சாத்புத்தினாசோ புதினாசத்ப்ரணச்யதி
பகவத் கீதை இரண்டாம் அத்தியாயம் சாங்கிய யோகம்,63 ஆம் ஸ்லோகம்
சினத்தால் மனக்குழப்பம், குழப்பத்தால் நினைவின்மை; நினைவு நாசத்தால் புத்தி நாசம்; புத்தி நாசத்தால் நிரந்தரமான அழிவு ஏற்படுகிறது. என்கிறது பகவத் கீதை இந்திரியங்களை பல விஷயங்களில் அலையவிடுவதால் நாம் கட்டுப்பாட்டை இழக்கிறோம். ஆசையும் காமமும் கட்டுப்பாடின்மையிலிருந்து உண்டாகிறது. எரியும் தீயை விறகுக்கட்டை வளர்ப்பது போல் மனத்தில் உருவாகும் எண்ணங்கள் ஆசையை கொழுந்து விட்டு எரியச் செய்கிறது.
ஆசையை தணிப்பதற்கு எடுக்கும் முயற்சிகள் தோல்வியடையும் போது கோபம் உண்டாகிறது. அது பரஸ்பர விரோதத்தையுண்டாக்கிறது. விரோதம் சண்டையிலும் நாசத்திலும் சென்று முடிகிறது.
விஷயாதிகளால் கவரப்படும் மனத்தை எப்படி மீட்டெடுத்து இறைவன் பால் நிறுத்த முடியும்?
அதற்கு அந்த அருணாசலத்தின் அருள் தான் வேண்டும்
புயலில் சிக்கிய கப்பல் ஒரு நிலை கொள்ளாமல் அலைக்கழிக்கப் ப்டுவது போல் மனம் ஆசைப்  புயலால் அலைக்கழிக்கப்பட்டு நம் நிம்மதியை அழிக்கிறது.

பகவான் ரமணர் அருணாசலத்தை உளத்தின் மேல் உறுதியாக இருக்கும்படி வேண்டுகிறார். பகவான் இன்னொரு நூலான உபதேச வுந்தியாரில் உளமும் அருணாசலமும் ஒன்றே தான் என்ற் சாதிக்கிறார்.




இருக்கு மியற்கையா லீசசீவர்க
ளொருபொருளேயாவருந்தீபற
வுபாதி யுணர்வேவே றுந்தீபற
                ஸ்லோகம் 24,உபதேசவுந்தியார்

இயற்கையில் ஈசனும் (பரமாத்மாவும்) ஜீவாத்மாவும் ஒரு பொருளேயாவர். அதை உணர்வதில்த்தான் வேறுபாடுள்ளது.
அடுத்த ஸ்லோகத்தில் இதை இன்னும் தெளிவு படுத்துகிறார்.

தன்னை யுபாதிவிட் டோர்வது தானீசன்
றன்னை யுணர்வதா முந்தீபற
தானா யொளிர்வத லுந்தீபற
                           ஸ்லோகம் 26,உபதேசவுந்தியார்
தான் என்ற உணர்வை விட்டொழிப்பதின் மூலம் ஈசனை நாம் அடையாளம் காண்கிறோம். நாம் யார் என்றறிந்துவிட்டால் ஈசனை அடைந்தவர்களாகிறோம். ஈசன் தானே நம்முள்: ஒளிர் விட்டுக் கொண்டிருக்கின்றார்.
ஆகவே மனதை ஒருமுகப்படுத்துவதற்கு ஒரே வழி நான் யார் என்ற விசார மார்க்கமே.
அந்த மார்க்கத்தில் பயணம் செய்தால் தானாகவே அருணாசலத்தின் அழகு தென்படும். நாமும் அருணாசலமும் ஒன்றே தான்; வேறு சிந்தைக்கு இடமில்லை என்பது புரியும்
அதன் தொடர்ச்சியாகத்தான் பகவான் அருணாசலேசுவரரிடம் அவரது அழகை தனக்கு உணர்த்தச் சொல்கிறார். அந்த வெளிச்சம் நமக்கு தென்ப்பட்டு விட்டால் அப்புறம் நம் மனம் வேறு ஒன்றையும் நாடாது


No comments:

Post a Comment