Monday 23 February 2015

ரமணஜோதி 74

ரமணஜோதி 74

  நிர்வாணம்


நெக்குனெக் குருகியான் புக்கிட வுனைப்புக
னக்கனா நின்றனை யருணாசலா’
‘நான் உன்னை வந்தடைகின்ற மார்க்கம் தெரியாமல் எங்கெல்லாமோ சுற்றித் திரிந்து திக்கு முக்காடி புகலிடம் எதுவும் கிடைக்காமல் பக்தி மார்க்கம் கர்ம மார்க்கம் என்றெல்லாம் அலைந்து திரிந்து கடைசியாக உன்னைக் கண்டேன். கண்ட பொழுது நீ நிர்வாணமாக நிற்கின்றாய்., அருணாசலா ‘என்கிறார் பகவான் இந்த சுலோகத்தில்.
பூரண சரணாகதியின் முடிவும் ஆத்மஞானத்தின் முடிவும் ஒன்றே தான்; ‘நான்’ அழிகிறது; அஹம் உருகி உருகி இருந்த இடம் தெரியாமல் போகிறது. நித்ய ப்ரம்மம் மட்டும் எஞ்சி நிற்கிறது. அதுவும் எந்த விதமான ஆவரணமும்—மறைவும் இல்லாமல் மாயா வலையங்கள் எல்லாம் அவிழ்ந்து போய் நிர்வாணமாக சுத்த பிரம்மமாக நிற்கிறது. அங்கு வேறு எதுவுமே இல்லை.
பகதர்கள் உன்னைக் காண வேண்டும் என்று பயணம் துவங்குகிறார்கள். பயணம் முடியும் பொழுது அவர்களே இல்லாமலாய் யார், யாரை காண்பது என்ற நிலை உண்டாகிறது. அப்பொழுது உண்டாகின்ற உணர்விற்க்கு ஆனந்தம் என்று சொல்வதா,சாந்தி என்று சொல்வதா?
இந்த இடத்தில் நாம் கடந்த மடல்களில் மேலோட்டமாக பார்த்த கீழே குறிப்பிட்டுள்ள சில தத்துவங்களை இன்னும் சற்று உள்ளே சென்று பார்க்கலாம் என்று தோன்றுகிறது:
·         தத்துமசி எங்கின்ற மஹாவக்கியம்
·         ஜக்ரத்-சொப்ன-சுஷுப்தி-அவஸ்தா த்ரயங்கள்
·         பஞ்சகோச ஆவரணங்கள்
·         ப்ஞ்சேந்திரியங்கள்
·         கர்மேந்திரியங்கள்
முக்கியமாகத்த்துவமசிஎன்ற மஹா வாக்கியத்திலுள்ளத்வம்என்ற பதத்தின் பொருளை சற்றே ஆழமாக பார்க்கலாம்.

ஸாம வேதத்தில் சாந்தோக்யோபனிஷத்தில் உத்தாலக மஹிரிஷி தன்னுடைய சீடனான சுவேதகேதுவிற்கு உபதேசித்த விலை மதிப்பிட முடியாத தத்துவம் தான் “” தத்துவமசிஎன்ற மஹாவாக்கியம்.

அதன் வாக்கியார்த்தம்அது நீயாகிறாய்என்பதாகும்
பகவத்கீதை முழுவது நிறைந்து நிற்கின்ற மஹா தத்துவமும் இதுவே தான்.
 இந்த மஹா வாக்கியத்தில் மூன்று வார்த்தைகள் அடங்கியுள்ளன.: அவை முறையே ,’தத்’ ‘த்வம்’  ‘அசி’ என்பதாகும்.
தத்” “அதுஎன்று பொருள்பட உபயோகப் படுத்தப் பட்டுள்ளது. “ அது “ என்னவென்று முன்னொரு மடலில் பார்த்தோம்.
அதுபிரம்மத்தைக் குறிக்கிறது என்றும் பிரம்மத்தின் குணாதிசயங்கள் ( குணங்களே இல்லாத அதிசயம்) குறித்தும் ஏற்கனவே விவரமாக பார்த்துள்ளோம்
இங்கேத்வம்என்பதன் பொருளைப் பார்ப்போம்.
த்வம்என்ற ஒரு வார்த்தையில் ஜீவாத்மாவின் எல்லா குணாதிசயங்களும் அடங்கியுள்ளன.
ஜீவாத்மாஸ்தூலம்’, “சூக்ஷ்மம்”, “ காரணம்”  என்ற மூன்றுவிதமான உபாதிகளால் கட்டப்பட்டுள்ளது. இவைகளை ஒன்றொன்றாக அவிழ்த்துக் கொண்டு விடுதலை பெறும்பொழுது நாம் அந்த நிர்வாண சுந்தரமான பிரமனை தரிசிக்கிறோம்.

நாம் ஸ்தூல  சரீரத்தால் கட்டப்பட்டிருக்கும் பொழுது மட்டும் தான் பிரக்ஞை உள்ளவர்களாக இருக்கிறோம் இந்த அவஸ்தை ஜாக்ரத் என்று கூறப்படுகிறது. இந்த அவஸ்தையில் நமக்கு மற்ற ஸ்தூல பொருட்களுடன் தொடர்பு ஏற்படுகிறது. அந்த தொடர்புகள் நம்மில் உளவாக்கின்ற உணர்வுகள் தான் பசி, தாகம் முதலியன.
இந்த அவஸ்தையில் நாம் கண்கள் மூலம் மற்ற உருவங்களை காண்கின்றோம்.காதுகள் மூலம் ஒலியை கேட்கின்றோம்; நமது ஸ்தூல சரீரத்தை மூடியிருக்கின்ற தோலின் மூலம் ஸ்பரிச சுகத்தை அனுபவிக்கிறோம்; மூக்கின் வழியாக மணங்களை அறிகிறோம்.
வாக்இந்திரியத்தின் உதவியால் பேசுகின்றோம்; கைகளால் மற்ற பொருள்களை எடுக்கிறோம் ,கொடுக்கிறோம்;கால்களால் நடக்கிறோம்;
விஸர்ஜனேந்திரியங்கள் ( பாயு ) வழியாக நமக்கு வேண்டாதவற்றை வெளியேற்றுகிறோம்; ஜனனேந்திரியங்கள் ( உபஸ்தம் ) துணையுடன் மக்கள் செல்வத்தை உற்பத்தி செய்கிறோம்.
இந்த செய்கைகள் நடக்கும் பொழுது நமது உள்ளில் பல விதமான விகாரங்களும் விசாரங்களும் உளவாகின்றன. ருசி,வாசனை,காமம்,குரோதம்,பிரியம்,வெறுப்பு, முதலியன உண்டாகின்றது.
அந்த விகார விசரங்களின் பயனாக  நமது  தீருமானங்கள் எடுக்கின்ற சக்தியுள்ள  நமது புத்தியின் உதவியுடன் நாம் மேற்கொண்டு செய்யவேண்டிய கிரியகளை தீருமானிக்கின்றோம்.
அந்த கிரியைகளை நிறைவேற்ற முயலும் பொழுது சந்தோஷமோ சங்கடமோ உண்டாகின்றது.அந்த சந்தோஷத்திலிருந்தோ சங்கடத்திலிருந்தோ மீண்டும் வேறு சில விகார விசாரங்கள் உண்டாகின்றாது. மீண்டும் தீருமானங்கள்.
இப்படி முடிவில்லாதசுழர்ச்சியில்அகப்பட்டுக்கொள்கிறோம் இது தான் ஜாக்ரத் அவஸ்தையில் ஜீவாத்மாவின் நிலை.
இந்த அவஸ்தயில் தொடர்ந்து இருக்கின்ற ஒரே எண்ணம்,நான்’ என்னுடையது’ ‘,எனக்கு’  என்கின்றது தான்.  நான் இதை செய்கின்றேன், எனக்கு வேண்டும், நான் கொடுப்பேன்   நான் எடுப்பேன், என்கின்ற எண்ண அலைகள். நிற்காமல் எழுந்துகொண்டேயிருக்கின்றன.
“ இந்த நிலையில் ஜீவாத்மா ஏழு அங்கங்களுடனும் வேளியுலக ப்ரக்ஞையோடும்.பத்தொன்பது முகங்களோடும் எல்லாவற்றையும் உள்வாங்கிக் கொண்டும் இருக்கிறது” என்று மாண்டுக்யோபனிஷத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது.
          ஜாகரிதஸ்தானோ பஹிர் ப்ரக்ஞ: சப்தாங்க:
          :கானvவிம்சதிமுக::ஸ்தூலபுக்.
                            மா.உ. 3

சிரஸ் (தலை) ,மாறிடம், வயிறு, இரண்டு கைகள்,இரண்டு கால்க:ள் இவைதான் ஏழு அங்கங்கள்,
ஐந்து ஞானேந்திரியங்கள்,  ஐந்து கர்மேந்திரியங்கள்,  ஐந்து பிராணன்கள்,  நம் உள்மனதின் ( அந்தக்கரணத்தின் )  நான்கு படிமங்கள், என்பவை  பத்தொன்பது முகங்கள்.
இவையெல்லாம் சேர்ந்து மொத்தமாக ஸ்தூல சரீரம் அல்லது அன்னமய கோசம் என்று கூறுகிறோம்.
இந்த ஏழு அங்கங்களுடைய  பத்தொன்பது முகங்களுடன் நாம் வெளி யுலக போகங்களை அனுபவிப்பது தான் ஜாக்ரத் அவஸ்தை.
சொப்னாவஸ்தையில் நாம் ஸ்தூல சரீரத்தை உபயோகப்படுத்துவதில்லை. அந்த அவஸ்தையில் சூக்ஷ்ம சரீரம் தான் இயக்கத்திலுள்ளது. அந்த அவஸ்தையிலும் மேற்கூறிய ஏழு அவயவங்களும்,பத்தொன்பது முகங்களும் இயங்குகின்றன. ஆனால் மற்ற ஸ்தூலப் பொருட்களுடன் சம்பர்க்கம் ( தொடர்பு ) ஏற்படுவதில்லை.
     ஸ்வ்ப்ன்ஸ்தானோஅ ந்தப்ரக்ஞ: சப்தாங்க:
     ஏகோனவீம்சதீமுக: ப்ரவிவிக்தபுக். !
                     மா. உ.4
இந்த அவஸ்தையில் நாம் சிரசு (தலை ),மாறிடம், வயறு, கைகள், கால்கள் என்கின்ற ஏழு அவயவங்களையும் ஞானேந்திரியங்கள், கர்மேந்திரியங்கள், பிராணன்கள், அந்தக்கரணத்தின் நான்கு பாவ படிமானங்கள் என்கின்ற எல்லாவற்றையும் பயன் படுத்துகிறோம்.
அது எப்படி சாத்தியமாகும்? சொப்னாவஸ்தை நாம் ஒரே இடத்தில் படுத்திருக்கும் போது உண்டாகின்ற அவஸ்தையல்லவா? எப்படி கர்மேந்திரியங்கள் உபயோகத்தில் வரும்? சந்தேகம் நியாயமே.
இந்த இடத்தில் நாம் கர்மேந்திரியங்களுக்கும் ஞானேந்திரியங்களுக்குமுள்ள தொடர்பை புரிந்து கொள்ள வேண்டும்.
ஞானேந்திரியங்களும் கர்ம்மேந்திரியங்களும் உண்மையில் நமது சூக்ஷ்ம சரீரத்தில் தான் நிலை கொள்கிறது. ஸ்தூல சரீர அங்கங்களான கண்கள்,செவிகள், கைகள்,கால்கள், விசர்ஜன அங்கங்கள், உபஸ்த-ஜனன அங்கங்கள் இவையெல்லாம் கட்டிடத்தின் ஜன்னல்கள் போல் தான். சூக்ஷ்ம சரீர அங்கங்களின் வெளித்தோற்றம் தான்
இந்த ஸ்தூல அவயவங்கள் அறுத்து எடுக்கப்பட்டாலும் சூக்ஷ்ம சரீரத்திலுள்ள அங்கங்கள் இயங்கிக்கொண்டு தானிருக்கும். கையை இழந்த ஒருவன் எதையாவது எடுக்க முயன்றால் அவனது ஸ்தூல கைகள் இருந்த இடத்தில் ஒரு சலனம் உண்டாகிறதை நாம் பலமுறை கண்டிருப்போம். ஒரு ஊமை பேச முயலும்பொழுது அவன் தொண்டைக்குழியில் ஏற்படுகின்ற அசைவுகளை நாம் காணலாம்.
உறங்கிகிடக்கும் பொழுது ஜனனேந்திரியங்கள் உயிர்  பெற்றெழுவதும், ஸ்கலனம் உண்டாவதும் சிலர் அனுபவித்திருக்க கூடும். குழந்தைகளும் வயதானவர்களும் படுக்கையில் மூத்திர விசர்ஜனம் செய்வதையும் நாம் கண்டிருக்கிறோம்.
ஆகவே சொப்னாவஸ்தையில் நமது கர்மேந்திரியங்கள் ஞானேந்திரியங்களின்  சொற்படி இயங்கும்.
ஞானேந்திரியங்கள் என்பன வெளியுலக தொடர்பு மூலம் கிடைக்கின்ற சமிக்ஞ்களை.கிரகிப்பதற்கு உதவுகின்ற அங்கங்கள். கிடைத்த சமிக்ஞைகளின்  கிடைப்பதற்கு காரணமும் கிடைப்பதின் விளைவுகள் வெளிப்படும் ஸ்தானங்களாகவும் கர்மேந்திரியங்கள் பயன்படுகின்றன.
இவைகளையெல்லாம் இயக்குவது பிராணன்.பிராணன் ஒன்று தான் என்றாலும் அதற்கு ஐந்து விதமான உருவ வேறுபாடுகள் உண்டு.
1.       பிரணன்
2.       அபானன்
3.       வ்யானன்
4.       உதானன்
5.       ஸமானன்
இதயம் முதல் நாசியின் நுனி வரை இயங்குகின்ற பிராணசக்தியை பிராணனென்றும்
மல மூத்திர விசர்ஜ்ஜனத்திற்கு உதவுவதும்,பொக்கிள் தடம் முதல் மல மூத்திர விசர்ஜ்ஜன அவயவங்கள் வரை இயங்குகின்ற சக்தியை அபானனென்றும்;
சரீரம் முழுவதும் வியாபித்து இயங்குகின்ற சக்தியை வ்யானனென்றும்;
கண்டம் ( தொண்டைக் குழி) முதல் மேல் நோக்கி சஞ்சரிக்கின்றதும் முகத்திலும் தலையிலும் உள்ள அங்கங்களை இயங்கவைப்பதுமான சக்தியை உதானனென்றும்;
நமது சரீரத்தில் உணவை பக்குவப்படுத்தி  ரசாயன முறைப்படுத்தி சப்த தாதுக்களாக்கின்ற சக்தியை சமானனென்றும் சொல்கிறோம்.
இந்த பிரணன்களின் சக்தியால் நமது ஞானேந்திரியங்களும் கர்மேந்திரியங்களும் இயங்குகின்றன. அதன் பயனாக ஜீவராசிகளில் சிருஷ்டி,ஸ்திதி,சமாரம் ( பிறப்பித்தல், காத்தல் ,அழித்தல் )  என்ற மூன்று கிரியைகளும் நடக்கின்றன..
இப்படிப்பட்ட பிராணனும் ஞானேந்திரியங்களும் கர்மேந்திரியங்களும் சேர்ந்து பிராணமய கோசம் என்ற பெயரால் அறியப்படுகின்றன.
பிராணமய கோசத்தின் இயக்கத்தால் உளவாகின்ற  விகார விசாரங்களை ஜாக்ரத் அவஸ்தையில் பிரக்ஞை எனப்படுகிறது. அதன் வெளிப்பாடு தான் பசி, தாஹம் முதலியன.

சூக்ஷ்ம சரீரத்தில் இயங்குகின்ற அந்தக்கரணம் சித்தம்,புத்தி,அஹங்காரம்  முதலியவற்றைக் குறித்து அடுத்த மடலில் பார்ப்போம். 

No comments:

Post a Comment