Friday 19 December 2014

ரமணஜோதி 23


நம்முள் கௌரவ-பாண்டவர்கள்


குற்றமுற் றறுத்தெனைக் குணமாய்ப் பணித்தாள்
குருவுரு வாயொளி ரருணாசலா     

முன் சுலோகத்தில் பகவான் செய்த வேண்டுதலை திரும்பவும் வேறு விதத்தில் இந்த சுலோகத்திலும் கூறுகிறார்;
கருணை கூர்ந்து நீ என்னுடைய குற்றங்களையெல்லாம் முற்றிலும் அறுத்தெறி யருணாசலா என்கிறார் பகவான்.

நம் மனதுள்ளேயே குருக்ஷேத்திரமும் தர்மக்ஷேத்திரமும் இருக்கிறது என்பதை  இதற்கு முன் பார்த்தோம்..
குருக்ஷேத்திரத்திலுள்ள கௌரவ பாண்டவர்களை அழித்தால் தான் நமக்கு முக்தி கிடைக்கும்.
கௌரவ பாண்டவர்கள் இரு கூட்டருமே ஆசைகளின் பிரதி பிம்பங்களாக இருக்கிறார்கள். அவர்கள் நம் மனத்திலுள்ள நூற்றுக் கணக்கான ஆசைகளையே பிரதிபலிக்கிறார்கள்.
இந்த குற்றங்குறைகளை கிருஷ்ண பரமாத்மா கீதையில் பதின்மூன்றாம் அத்தியாயத்தில் அர்ஜுனனக்கு விவரமாக விளக்கியுள்ளார்.

மஹாபூதான்யஹங்காரோ புத்திரவ்யக்தமேவ ச
இந்திரியாணி தசைகம் ச பஞ்ச சேந்திரிய கோசரா

இச்சா: த்வேஷ சுகம் துக்கம் ஸங்காதஷ்சேதனா த்ருதி:
ஏகத்க்ஷேத்ரம் ஸமாசேன ஸவிகாரமுதாஹ்ருதம்
பஞ்ச மஹா பூதங்கள் (பூமி,நீர்,நெருப்பு,காற்று,ஆகாயம்) அஹஙாரம்,புத்தி, அவ்யக்த பரா பிரகிருதி,( சித்தம்)
 பத்து புலன்கள் (கண்,காது, மூக்கு,தோல், நாக்கு, வாய், கை, கால், பிறப்புறுப்பு, மலத்துவாரம் என்கின்றவை பத்து புலன்களாகிறது.)

மனம் மற்றும் ஐந்து புலன் விஷயங்கள்  இவையெல்லாம் நமது குற்றங்களுக்கு மூல காரணமாக அமைகிறது.


இந்த புலன்களுக்கு விஷயமான உருவம்,சுவை,மணம்,ஓசை,மற்றும் தொடுவுணர்ச்சி (ரூப கந்த, ரசம், சப்தம், ஸ்பர்சம்)  நம்மை இந்த இஹ லோகத்துடன் பந்தித்து வைக்கிறது.
இவைகளுடன் விருப்பு, வெறுப்பு, சுகம், துக்கம், இவை அனைத்தும் கூடியுள்ள இந்த ஸ்தூல பிண்டம், மற்றும் விகார உணர்வுகள் சேர்ந்து நம்முள் நல்ல-தீய விதைகளை விதைக்கின்றன .அவை நல்ல,-புலன் நுகர்ச்சி ஆசைகளை உளவாக்குகின்றன. அவை நம்மை இந்த இஹ லோகத்துடன் கட்டிப் போட்டு விடுகின்றன.அந்த பந்தங்கள் இருக்கின்ற வரை நம்மால் பரமாத்மாவுடன் லயிக்க முடிவதில்லை.

இந்த பந்தங்களிலிருந்து விடுபடுவதற்கு ஆதி சங்கரர் தத்துவ போதத்தில் சொல்லியிருக்கின்ற மார்க்கம் தான் சாதனா சதுஷ்டயம்.
ஸாதனா சதுஷ்டய ஸம்பன்னாதிகாரம்
மோக்ஷதானபூதம் தத்வவிவேக ப்ரகாரம் வக்ஷ்யம:

ஸாதனா சதுஷ்டயம் என்பது நான்காக பிரிக்கப்பட்டுள்ளது.
1.நித்ய அனித்ய வஸ்து விவேகம்
பூரணத்துவம் அடைந்த விவேகம் என்பது நிரந்தரமானது எது நாசமடையக்கூடியது எது என்று பாகுபடுத்திப் பார்ப்பதற்கான அறிவு. இந்த விவேகம் என்பது எல்லாருக்கும் பிறக்கும்போதே கிடைப்பது தான்.ஆனால் இதை ஆக்கபூர்வமாக இயக்குவது கடினமானது அதற்கு விடா முயற்சி வேண்டும்.
நாசமில்லாத வஸ்து/ நித்ய வஸ்து என்பது எது?

நித்ய வஸ்த்வேகம் ப்ரஹ்ம தத் வ்யதிரிக்தம்
ஸர்வம் அனித்யம் அயமேவ நித்யானி
நித்ய வஸ்து என்பது பிரமம் மட்டுமே. மற்றவையெல்லாம் த்ய வஸ்து விவேக:
 அனித்யமானவையே. ஆகவே யாரொருவர் நித்ய வஸ்துவை கண்டறிய வேண்டுமோ அவர்கள் முதலில் தன்னைத்தானே அறிந்துகொள்ளவேண்டும். அந்த நான் மட்டும் தான் அழிவில்லாதது என்பதை புரிந்துகொள்ள வேண்டும் அந்த நான் பிரமமே என்றறிய வேண்டும்

2. இஹமுத்ரா பல போக விராக
விராகம் அல்லது வைராக்யம் என்றால் எல்லாவற்றையும் விட்டு விட்டு காட்டுக்கு ஓடுவதல்ல. அது பொறுப்பின்மை,கோழைத்தனம்.
வஸ்து விவேகம் ஏற்பட்டாலே வைரக்யம் தானாகவே வந்து விடும்..எதற்கும் இச்சைப் படாத நிலை.எதிலும் ஒரு விதமான பற்று கொள்ளாத நிலை தான் விராகம் அல்லது வைராக்யம்.
போகத்திற்கு ஆசைப் படாமல் இருப்பது விராகம்.சொர்க்க பிரவேசத்திற்கு கூட ஆசைப் படக்கூடாது. இது இரண்டாவது தேவை.

3.ஸமாதி ஷட்க சம்பத்தி
மூன்றாவதாக விராகம் வேண்டுமென்றால் ஆறு விதமான குணங்களை வளர்த்திக் கொள்ளவேண்டும்

ஸாமோ  தாம உபரமஸ்திதிக்ஷ ஷ்ரத்தாச இதி:
ஸாமம் ,தாமம், உபரமம். /உபரதி, திதிக்ஷா, ஸ்ரத்தா,ஸமாதானம் இவை தான் அந்த ஆறு குணங்கள்.
ஸாமம்
ஸாமம் என்பது மனோ நிக்ரஹம். ஐம்புலன்கள் தொடர்பான ஆசைகளை விட்டொழித்தல். இந்த மாதிரியான வாசனைகள் அழிந்து விட்டால் மனம் அமைதியடைந்து விடும்.
தாமம்
சக்ஷுராதி பாஹ்யேந்திரிய நிக்ரஹவிடா முயர்சியினால்த் தான் ஸாமம் அடைய முடியும். தாமம் இதற்கு முன்னோடியானது.
மனம் கட்டுப்பட்டிற்குள் இருந்தால் கூட நமது ஞானேந்திரியங்காள் ( கண்,காது,மூக்கு,நாக்கு உடல்) நம் சொல் படி கேட்காமல் தறிகெட்டு அலையக் கூடும்.அதன் காரணமாக நமது கர்மேந்திரியங்கள்( கைகள்,கால்கள், வாய்,பிற்ப்புறுபுக்கள்,விசர்ஜன உருப்புக்கள்) ஆட ஆரம்பித்துவிடும்.அதன் விளைவாக மனம் சஞ்சலப் படக்கூடும். அதனால்த் தான் ஞானேந்திரியங்களையும் கர்மேந்திரியங்களையும் கட்டுக்குள் கொண்டுவரவேண்டியது மனோ நிக்ரஹத்திற்கு முன்னோடியானது.
உபரமம்/உபரதி
மனதை இந்திரியங்களின் கட்டுப் பாட்டிலிருந்து விடுவித்து விட்டோமானால் அதை சும்மா இருக்க விடலாகாது. மனத்தால் சும்மா இருக்க முடியாது.அதற்கு வேலை கொடுக்கவில்லை என்றால் அது மறுபடியும் பழைய வாசனகளின் படி இயங்க ஆரம்பித்து விடும். ஆகவே மனதை சன்மார்க்கத்திற்கு திருப்பிவிடவேண்டும் இந்த முயற்சியே உபரமம் எனப்படுகிறது.
திதிக்ஷா
(சீதோஷ்ண ஸுகதுக்காதி ஸஹிஷ்ணுத்துவம்)
 எல்லாவற்றையும் சமமாக பாவிக்கும் மனோ பக்குவத்தைத் தான் திதீக்ஷா என்று சம்ஸ்கிருதத்தில் குறிப்பிடுகிறார்கள்.
Every action has an equal and opposite reaction  என்று ஆங்கிலத்தில்க் கூறுவார்கள். குளிர்-சூடு,சுகம்-துக்கம்,விருப்பு வெறுப்பு,லாபம்-நஷ்டம், வெற்றி தோல்வி, புகழ்ச்சி-இகழ்ச்சி, என்று இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.இவையெல்லாவற்றையும் சமமாக பாவிக்கின்ற மனோ பக்குவம் பெறவேண்டும்

ஷ்ரத்தா (குரு வேதாந்த வாக்க்யாதிஷு விஸ்வாஷ ஷ்ரத்தா)

நம்பிக்கை வேதாந்த வாக்க்யங்களின் மீது, குரு வசனங்களின் மீது அசையாத  நம்பிக்கை வேண்டும்.
சமாதானம்(சிதைகாக்ரம்)

மனதை ஒருமுனைப் படுத்துதல்-இஹ லோக விஷயங்களிலிருந்து மனதை திருப்பி பிரமனில் லயிப்பித்தல்.இதைத்தான் ஆதி சங்கரர் ஸம்யக் ஆஸ்தாபனம் என்று கூறினார்.

4. முமுக்ஸ்துவம்(மோக்ஷமே பூயாத் இதி இச்சா)
என்ன நிகழிலும் இந்த இக லோக பந்தங்களிலிருந்து அனித்யமான வஸ்துக்களிலிருந்து விலகி  பரமனில் மனதை ஒருமுக படுத்த வேண்டும்.
இவைதான் சாதனா சதுஷ்டயம்.
இதில் வெற்றிபெறுவதற்கு குருவின் அருள் கட்டாயம் வேண்டும்.பகவான் ரமணர் அந்த அருணசலரையே குருவாக நினைத்து அவர் காட்டிய வழியிலேயே திருவண்ணாமலை வந்து சேர்ந்தார். அந்த குருவாகப்பட்ட அருணசலரையே  நமக்கு ஒளிகாட்டுமாறு வேண்டிக்கொள்ளுகிறார்.

பட்டினத்தாரும் இதையே தான் பாடியிருக்கிறார்:

மூலமறியேன்,முடிவுமறியேன்
ஞாலத்துள் பட்ட துயர் நாட் நடக்குத்டா
தனுவாதி நான்கும் தானாய் மயங்கினடா
மனுவாதி சத்தி வலையி லகபட்டனடா
மாமாயை யெனும் வனத்தில் அலைகிறண்டா
தாமாய் உலகனைத்தும் தாது கலங்கிறண்டா
ஐந்து புலனு மடங்கேனே யென்குதே
சிந்தை தவிக்கிறதுன் தேறேனே யென்குதே
கன்னிவன நாதா! கன்னிவன நாதா!
அச்ச மாங்கார மடங்கேனே யென்குதே
கைச் மின்னுமான் கழலேனே



No comments:

Post a Comment