Friday 19 December 2014

ரமண ஜோதி 29

ரமண ஜோதி 29


முதலையை வதம் செய்வோம்


கெஞ்சியும் வஞ்சியாய்க் கொஞ்சமு மிரங்கிலை
யஞ்சலென் றே யருளருணாசலா

பகவான் ரமணர் பக்தர்கள் சார்பில் அருணாசலரிடம் சொல்கிறார்:
நான் எவ்வளவு கெஞ்சியும் நீ இரக்கம் காட்டி என்னை உன்னோடு சேர்த்துக்கொள்ள மாட்டேனென்கிறாய்.;பரவயில்லை; குறைந்த பட்சம் கவலைப்படாதே  அஞ்ச வேண்டாம், நான் இருக்கிறேன் ,பார்த்துக்கொள்கிறேன்என்றாவது சொல்லக்கூடாதா?
இரண்டு சுலோகங்களுக்கு முன்னால் அருணாசலரரை கிருபாக்கடல் என்று வருணித்து விட்டு இப்பொழுது கொஞ்சமும் இரக்கமில்லாமல் என்னை வஞ்சிக்கிறாய் என்று பகவான் சொல்கிறாரே என்று எண்ண வேண்டாம்.
இது ஒரு விதமான வஞ்சப் புகழ்ச்சி. அருணாசலர் இரக்கமில்லாமல் கைவிடமாட்டர் என்று உறுதியாகக் கூறுவதற்கு பதிலாக எதிர்மறையாக கூறுகிறார். பகவானுக்கு அருணாசலரரிடம் அவ்வளவு உரிமை.
இதையே தான் பகவத் கீதையில் ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனிடம் சொல்கிறார்.
யே து ஸர்வாணி கர்மாணி மயி ஸம்ன்யஸ்ய மத்பரா !
அனன்யேனைவ யோகேன மாம் த்யாயந்த உபாஸதே !!

தேஷாமஹம் ஸமுத்தர்தா ம்ருத்யுஸம்சாரஸாகராத் !
பவாமி நசிராத்பார்த்த மய்யாவேசித சேதஸாம் !!
                   கீதை அத்.12 சுலோ 6-7

எவனொருவன் தன் கர்மமங்கள் அனைத்தையும் பகவானுக்கு அர்ப்பித்துவிட்டு பகவானே சரணம் என்று அலைக்கழிக்கப்படாத மனதுடன் தியானம் செய்கிறானோ அவனை இந்த ஜனன மரணம் எனும் சம்சார சாகரத்திலிருந்து நிச்சயம் கரையேற்றிவிடுவார்.
இம்மாதிரியான ஒரு உறுதி மொழியைத் தான் பகவான் அருணாசலரரிடம் வேண்டுகிறார் அல்லது அருணாசலர் சார்பில் நமக்கு அளிக்கிறார்.

பிறந்தவரெல்லாம் இறக்கத்தான் வேண்டும்.ஆனால் இறப்பதற்கான நேரம் அவரவர் பிராரப்தத்தைப் பொறுத்து இருக்கிறது. ஆனால் இந்த உடல் அழியாவிட்டாலும் நம் பகவானிடம் பூரண சரணாகதி அடைந்து மனதை முழுவதுமாக செலுத்திவிட்டோமானால் நாம் இருக்கிமிடம் பூலோகமாக இருந்தாலும் அது சொர்க்க லோகமாகிவிடும்.

ஏனென்றால், ஒவ்வொரு மனிதனும் பிறக்கும் போது வித்யா, அவித்யா என்ற இரண்டு விதமான குணங்களுடன் பிறக்கிறான். அவித்யா குணத்தை விட்டொழித்து வித்யா குணத்தை விருத்தி செய்துகொண்டால் படிபடியாக உலக வாசனைகளில் உள்ள ஈடுபாடு குறைந்து பிரமனை நெருங்கிவிடுவோம். நமக்கு ஆத்ம சாக்ஷத்காரம் கிடைத்து விடும்.
 மய்யேவ மன ஆதத்ஸ்வ மயி புத்திம் நிவேசய !
நிவஸிஷ்யஸி மய்யேவ அத ஊர்த்வம் ந் சம்சய: !!
                     கீதை அத்.12 சுலோ 8

அருணாசல பஞ்சரத்னத்தில் நாலாவது ஐந்தாவது சுலோகங்களில் பகவான் கூறுகிறார்.:

வெளிவிடயம் விட்டு விளங்குமரு ணேசா
வளியடக்க நிற்கு மனத்தா------லுளமதனி
லுன்னைத் தியானித்து யோகி யொளிகாணு
முன்னி லுயர்வுறுமீ துன்
வெளிவிஷயங்களின் மிதுள்ள எல்லா ஈடுபாட்டையும் உதறித் தள்ளி விட்டு உன்னை இடைவிடாது த்யானித்துக் கொண்டிருக்கும் யோகி நான்..எனக்கு நீ ஒளி காட்டு என்கிறார்..
இந்த இடத்தில் ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். பகவான் ரமணரின் உபதேசம் எல்லாம்ஒன்றைத் தவிர வேறொன்றில்லை என்கின்ற உண்மையை அடிப்ப்படையாக கொண்டது..வெளி விஷயங்களிலுள்ள ஆசாபாசங்களையெல்லாம் விட்டு விட்டு உன்னை த்யானித்தால் என்று கூறும்பொழுது,உன்னை என்பது யாரைக் குறிக்கிறது என்ற கேள்வி எழுகிறது. வெளி விஷயங்கள் எல்லாம் மாயை என்றால் அந்த உன்னுக்கு உருவமும் கிடையாது பெயரும் கிடையாது. அதற்கு இருப்பிடமும் நம்முள்ளேயே தான். ஒளி காண்பதும் நம்முள்ளே தான் அருணேசன் என்றால் யார்? அதுவும் நாம் தான்.
அதனால்த் தான் மேலும் கூறுகிறார்:

உன்னிடத்த லொப்புவித்த வுள்ளத்தா லெப்பொழுது
முன்னைக்கண் டெல்லாமு முன்னுருவா-----யன்னியமி
லன்புசெயு மன்னோ நருணாச லாவெல்கு
மின்புருவா முன்னிலாழ்ன் தே

எப்பொழுதும் என்றால் ஜாக்ரத்,சொப்ன,சுஷுப்தி,துரிய ஆகிய நான்கு அவஸ்தயிலும் உன்னை கண்டு எல்லா உருவிலும் நீ தான் என்று புரிந்துகொண்டு உன்னையன்றி வேறொன்றில்லை என்று உன்னிலேயே ஆழ்ந்து கிடகின்றேன். அதாவது உன்னில் நான் லயித்து விட்டேன். ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்றாகிவிட்டால் பரமான ந்தமே விஞ்சும்.

இந்த இடத்தில் பாகவதத்தில் வரும் கஜேந்திர மோக்ஷம் கதை ஞாபகத்திற்கு வருகிறது. முதலையிடம் பிடிபட்ட  கஜேந்திரன் மனமுருகி பகவானை காப்பாற்றும்படி இறஞ்சிக் கேட்ட பொழுது கரூடாரூடனாய் வந்து முதலையை கொன்று கஜேந்திரனுக்கு மோக்ஷம் கொடுத்தார் மஹாவிஷ்ணு என்று சொல்கிறது பாகவதம்..
அந்தக் கதை மிகுந்த ஆழமான கருத்துள்ள ஒரு கதையாகும். முதலில் கதையை பார்ப்போம்.
இந்த கதை பாகவதத்தில் எட்டாம் ஸ்கந்தத்தில் இரண்டிலிருந்து நாலு வரை அத்தியாயங்களில் விவரிக்கப் பட்டுள்ளது.
அர்ஜுனனின் பேரனும் அபிமன்யுவின் புதல்வனுமான பரீக்ஷித் மஹாராஜா கேட்டுக் கொண்டதற்கு இணங்க சுகப் பிரம்ம மஹரிஷி இந்தக் கதையை கூறுவதாக வருகிறது மஹா பாகவதத்தில்.
அடர்ந்த வனாந்திரத்தில் திரிகூட மலையடிவாரத்தில் கஜேந்திரன் என்ற ஒரு பெரிய யானை வசித்து வந்தது. கஜேந்திரன் ஒரு யானைக்கூட்டத்திற்கே தலைவனாக இருந்தான்..
ஒரு முறை காட்டில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டது. யானைகள் கூட்டமாக தண்ணீர் தேடி வெகு தூரம் சென்றது. அப்பொழுது அவர்கள் ஒரு அழகிய பூங்காவனத்தையும் அதன் நடுவே மிகவும் விசாலமான ஒரு ஏரியையும் கண்டார்கள். எல்லா யானைகளும் ஆனந்தமாக ஏரியில் இறங்கி நீராடினார்கள்.
நேரம் இருட்டியதும் யானைகள் ஒவ்வொன்றாக கரையேற ஆரம்பித்தன். தலைவன் என்ற முறையில் கஜேந்திரன் கடைசியாக கரையேற முற்பட்டான்.. ஆனால் அவனால் அசைய முடியவில்லை. அவன் கீழே துழாவிப் பார்த்தான். ஒரு கரிய பெரிய முதலை அவனது காலை கவ்விப் பிடித்துக் கொண்டிருந்தது.
கஜேந்திரன் தனக்குத் தானே சொல்லிக்கொண்டான், இந்த சிறிய நீரில் வாழும் பிராணி எல்லோரையும்போல என்னையும் நினைத்து விட்டது. நான் கஜேந்திரன்.இதோ ஒரு நொடியில் இந்தக் கொசுவை தூக்கி வீசுகிறேன்.

தன் தும்பிக்கையால் முதலையை சுற்றி வளைத்து பிடிக்க முயன்றான். முடியவில்லை. தன் சக்தி முழுவதையும் உபயோகித்து கரையை நோக்கி நகர முயன்றான். முடியவில்லை. தன் கூட்டாளிகளை உதவிக்கு அழைத்தான். அவர்களும் தம் தம் தும்பிக்கையை நீட்டி கஜேந்திரனின் தும்பிக்கயுடன் இணைத்து கஜேந்திரனை கரைக்கு இழுக்கப் பார்த்தார்கள்.  பயனில்லை. எல்லோரும் மிகவும் களைப்படந்து விட்டார்கள். நேரமும் இருட்டிக்கொண்டு வந்தது. இடமும் பழக்கமில்லாதது. இனிமேல் இங்கிருந்தால் நமக்கும் ஆபத்து என்று எண்ணி அவர்கள் ஒவ்வொருவராக போக ஆரம்பித்தார்கள்.
கஜேந்திரனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. இத்தனை நாளும் இவர்களுக்கு வழிகாட்டியாகவும் காவலனாகவும் இருந்த எனக்கு ஒரு ஆபத்து வந்த பொழுது இவர்கள் இப்படிய நடந்து கொள்கிறார்களே? என்று தனக்குத் தானே சொல்லிக்கொண்டு அடுத்து என்ன செய்ய்யலாம் என்று யோசித்தான்.

முன் ஜன்ம புண்ணியமோ என்னவோ அவனுக்கு சில விஷ்ணு ஸ்துதிகள் ஞாபகத்திற்கு வந்தது.மனமுருகி சொல்லலானான்:

ஓம் நமோ பகவதே தஸ்மை யத ஏதச்சிதாத்மகம் !
புருஷாயாதிபிஜாயபரேசாயாபிதீமஹி !!

எந்த ஒரு சைதன்யத்தின் காரணமாக இந்த ஜட சரீரமும் மனதும் சைதன்யவத்தாய்த்  தீருகிறதோ அந்த ஸ்த் சித் ஆனந்தனை அந்த பரமாத்மாவை ஓங்கார சப்தத்தின் வாயிலாக நான் நம்ஸ்கரிக்கிறேன் என்று துவங்கி முப்பது சுலோகங்களில் கஜேந்திரன் மஹாவிஷ்ணுவை பிரார்த்திக்கிறான்.
பத்தொன்பதாவது சுலோகத்தில் யாரொருவன் சகலவிதமான காம குரோத லோபாதிகளிலிருந்து முக்திவேண்டும் என்ற ஆசை கூட இல்லாமல்,- யாரொருவன் உன்னை நினைக்கிறானோ அவனுக்கு நீ ஜனன மரணத்திலிருந்து முக்தியளிக்கிறாயோ.அதே போல் என்னையும் இந்த ஆபத்திலிருந்து காப்பாற்று என்று மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறான்.
இருபத்தி ஒன்பதாம் சுலோகம் வரை அனன்ய பக்தியும்,பூரண சரணாகதியும் ததும்பி நிற்கின்ற பக்தி சுலோகங்களாக பாகவதத்தின் இந்த பகுதியில்.நமக்கு அருளிச் செய்கிறார் வியாச மஹிரிஷி
அதற்கு பின் விஷ்ணு தனது சுதர்சன சக்ரத்தால் முதலையைக் கொன்று கஜேந்திரனைக் காப்பாற்றுகிறார்.
அடுத்த அத்தியாத்தில் கஜேந்திரனின் மற்றும் முதலையின் பூர்வ ஜன்ம கதை விவரிக்கப்பட்டுள்ளது.
கஜேந்திர மோக்ஷ கதையிலிருந்து  மித்(myth-)ஐ ஒதுக்கிவிட்டு பார்த்தோமானால் நமக்கு நிறைய படிப்பினைகள் கிடைக்கும்
கஜேந்திரனைப் போல் நாமும் அஹந்தையால் உந்தப் பட்டு இந்த சம்சார சாகரத்தில் மூழ்கி திளைத்துக் கொண்டிருக்கிறோம். அப்படியிருக்கும் பொழுது அதன் அர்த்தமின்மை நமக்கு புரிவதில்லை. நாம் எப்பொழுது நினைக்கிறோமோ அப்பொழுது கரையேறிவிடலம் என்று நினைக்கிறோம்.
பலரும் மது ஆரம்பிக்கின்ற பொழுது இப்படித்தான் கூறுவார்கள். நான் எல்லாரையும் போல் இல்லை .எப்பொழுது வேண்டுமானாலும் இந்த பழக்கத்தை விட்டு விடுவேன்
ஆனால் ஒரு முறை அடிமையாகிவிட்டால் அதிலிருந்து மீள்வது அவ்வளவு எளிதன்று.
நாம் உடல் தளர்ந்து அல்லது காலத்தின் கட்டாயத்தால் போதும் இதிலிருந்து மீண்டு கரையேறுவோம் என்று நினைக்கும் பொழுது நம்மால் ஏற முடியாது. நம்மை கடந்தகால ஆசாபாசங்கள்,பந்தங்கள் எனும் முதலைகள் அந்த சாகரத்திற்குள்ளே மீண்டும் இழுக்கும். அதிலிருந்து கரையேறுவதற்கு நமது மனைவி மக்களோ மற்ற சொந்த பந்தங்களோ உதவ மாட்டார்கள். நாம் உள்ளுருகி பரமாத்மாவைப் பிரார்த்திபதன் மூலம் மட்டும் தான் கரையேறமுடியும் என்கின்ற தத்துவத்தை விளக்குகிறது கஜேந்திரனின் கதை.

இதையே வள்ளலார் வேறுவிதமாக கூறியுள்ளார் திரு அருட்பாவில்:
என்னை ஆண்டருளி என்பிழை பொறுத்த
இறைவனே திருசிற்றம் பலத்தே
என்னைஆண்டஞ்சேல் உனக்கு நல் அருளிங்
கீதும் என்ற என் குருவே
என்னை வேறெண்ணா துள்ளதே உண்ர்த்தி
எனக்குள்ளே  விளங்கு பேரொளியே
என்னை ஈன்றளித்த தந்தையே விரைந்திங்
கேற்றருள் திருச்செவிக் கிதுவே

நமக்குள்ளேயே இருக்கும் ஒளிதான் அந்த திருச்சிற்றம்பலத்தான் என்றும் அவன் அஞ்சேல் என்று நமக்கு ஆறுதல் அளிப்பான் என்றும் அஹம் ப்ரம்மஸ்மி என்பதை உளதையே உணர்த்துவான் என்றும் வள்ளலார் பெருமானும் கூறுகிறார்.

மேலும் வள்ளலார் பெருமான் கூறுகிறார்:

கோபமே வருமோ காமமே வருமோ
     கொடியமோ  கங்களே வருமோ
சாபமே அனைய தடைமதம் வருமோ
தாமதப் பாவிவந் திடுமோ
பாபமே புரியும் லோபமே வருமோ
பயனில்மாற் சரியம் வந் திடுமோ
தாப ஆங்கார மேஉறுமோஎன்
றையநான் தளர்ந்ததும் அறிவாய்


காமமா மதமாங்காரமா திகள்என்
கருத்தினில் உற்றபோ தெல்லாம்
நாமமார் உளத்தோ டையவோ நான்தான்
நடுங்கிய நடுக்கம் நீ அறிவாய்
சேம்ம உலகில் காமமா திகளைச்
செறிந்தவர் தங்களைக் கண்டே
ஆமைபோல் ஒடுங்கி அடங்கினேன் அதுவும்
ஐயநின் திருவுளம் அறியும்

இப்படி எல்லாம் தெரிந்திருந்தும் நீ இரங்காவிட்டால் நான் என்ன செய்வது வென்று பகவான் ரமணரும் கேட்கிறார்:


கெஞ்சியும் வஞ்சியாய்க் கொஞ்சமு மிரங்கிலை
யஞ்சலென் றே யருளருணாசலா
Description: https://ssl.gstatic.com/ui/v1/icons/mail/images/cleardot.gif

 

No comments:

Post a Comment