Friday 19 December 2014

ரமண ஜோதி 28



வேடனின் வலை


கூர்வாட் கண்ணியர் கொடுமையிற் படாதருள்
கூர்ந்தெனைச் சேர்ந்தரு ளருணாசலா

கூரிய வாளும் தப்ப முடியாத வலையுமுடைய வேடனிடமிருந்து எனை காத்து உன்னிடம் சேர்த்தருளருணாசலாஎன்று பகவான் ரமணர் நமக்காக அருணசலரிடம் வேண்டுகிறார்.
ஐம்புலன்களாகிய வேடன் விஷய வாசனைகளாகிய ஆயுதங்களுடன் நம்மை வேட்டையாடிக் கொண்டேயிருக்கிறான். அவனிடமிருந்து தப்புவது அவ்வளவு எளிதல்ல. அதற்கு பரமேஸ்வரனான அருணாசலரின் அருள் இன்றியமையாதது.
ஒருமுறை அவன் வலையில் விழுந்து விட்டால் அந்த வலையை அறுத்து எறிந்து விட்டு வெளியே வாருவது மிகவும் கஷ்டம்.ஆகவே  தான் பகவன் ஈசனின் அருளை வேண்டுகிறார். நாம் விஷய வாசனைகளீலிருந்து தப்பிக்க வேண்டுமென்றால் நமக்கு விவேகம் வேண்டும்.

மனோ நாம மஹவ்யாக்ரோ விஷயாண்யபூமீஷு!
சரத்யத்ர ந கச்சேந்து ஸாக்வோ யே முமுக்ஷ்வ: !

விவேக சூடாமணி 176 வது சுலோகத்தில் ஆதி சங்கரர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
மனம் எனும் வ்யாக்ரம்(புலி) ஐம்புலன்கள் உருவாக்கியுள்ள சிற்றின்பக் காட்டில் சுற்றித் திரிந்து கொண்டிருக்கிறது. ஆகவே இந்த உலக பந்தங்களிலிருந்து விடுபடவேண்டும் என்று விரும்புவர்கள் இந்தக் காட்டின் பக்கமே போகக்கூடாது என்கிறார் ஆதி சங்கரர். மனதிற்கு நம்மை சிற்றின்பத்தின் பால் இழுக்கும் சக்திமிகையாக உள்ளது. நமது புலனடக்கம் எனும் கவசத்தில் ஒரு சிறு ஓட்டை இருந்தால் போதும் அந்தப் புலி உள்ளே நுழைந்து விடும். ஒருமுறை நுழைந்து விட்டால் அதன் பசி அடங்கவே அடங்காது.ஆகவே அது வெளியேயும் போகாது.
அது  நம்மை பிச்சி சீந்தி சின்னாபின்னமாக்காமல் விடாது.
ஆகவே விவேக-வைராக்ய பாதையிலிருந்து சிறிதும் மாறாமல் கவனம் சிறிதும் சிதறாமல் விசார மார்க்கத்தில் உறைத்து நிற்க வேண்டும்

மன: ப்ரஸூதே விஷய்யான்சேஷான்
ஸ்தூலாத்மனா ஸூக்ஷ்மாதயா ச போக்து: !
சரீரவர்ணாஸ்ரமஜாதிபேதாத்
குணாக்றீயாஹேதுஃபலானி நித்யம் !!

                வி. சூ 177
மனம் நிரந்தரம் (விடாமல்) ஐம்புலன்களுக்கு தீனி(உண்வு) படைத்துக் கொண்டிருக்கிறது. இந்த தீனி வகைகள் ஸ்தூல ரூபத்தில் நமக்கு வெளியிலும் சூக்ஷ்ம ரூபத்தில் நம்முள்ளும் தோன்றிகொண்டேயிருக்கின்றன. இந்த போக வஸ்துக்களை மட்டுமல்லாமல் போக்தாவான நம்மையும் இந்த மனம் சிருஷ்டிக்கின்றது.
நினைத்து பார்த்தோமானால் நமது கனவுகளை உற்பத்தி பண்ணுவது நமது மனம் தான்.கனவில் வருகின்ற சுக-துக்கங்களை அனுபவிக்கின்ற நம்மை சிருஷ்டிப்பதும் அந்த மனம் தான். ஸ்வப்னாவஸ்தயில் அது நமக்கு புரிவதில்லை.அதே போல் ஜாக்ரத் (விழிப்பு) நிலையிலும் மனம் தான் எல்லாவற்றையும் உண்டுபண்ணுகிறது.ஆனால் நமக்கு அது புரிவதில்லை.
ஸ்தூல வஸ்துக்கள் பல நிறதிலும் மணத்திலும் பல உருவத்திலும் தோற்றமளிக்கிறது.
சூக்ஷ்ம வஸ்துக்களோ பலவிதமான எண்ணங்களாகவும் உண்ர்வுகளாகவும் பரிணமிக்கிறது.
இந்த மனோ விப்ராந்திக்கு ஜாதி மத வித்தியாசங்கள் கிடையாது.
இந்த செயல்பாடுகள் மனத்தின் விளையாட்டுக்கள் எல்லோருக்கும் ஒன்றே தான்.

நம் மனதில் பல விதமான எண்ணக்கோவைகள் எழத்தான் செய்யும். அவை முளைத்து வளரும்பொழுது தான் அவை முள்செடிகளா ,கனி தரும் செடிகளா என்று தெரிய வரும்.
முள்செடிகளை தெய்வானுக்கிரகத்தாலோ, குருவின் துணையுடனோ அழிக்க வேண்டும்.
நாம் முன் ஜன்மங்களில் சேகரித்து வைத்துள்ள வாசனைகள் இந்த ஜன்மத்தில்  முளைத்து தழைக்ககூடும். அவையை ஸ்வரூப த்யானத்தின் மூலம் அழிக்க வேண்டும். ஸ்வரூப த்யானம் என்றால் நான் யார் என்ற விசார மர்க்கம்.

கீதையில் அர்ஜுனனின் ஒரு கேள்விக்கு பதில் அளித்த கேசவன் கீழ்க்கண்டவாறு கூறினார்:
ப்ரஜ்ஹாதி யதா காமான் ஸர்வான் பார்த்த மனோகதான்  !
ஆத்மன்யேவாத்மனா துஷ்ட: ஸ்திதப்ரக் ஞஸ்ததோஸ்யதே !!

மனதிலெழுகின்ற ஆசையெல்லாமகற்றி ஆத்மாவின் ஆத்ம திருப்திய்டைந்திருப்பவன் ஸ்திதப்ரக்ஞன் என்று சொல்லப்படுகிறான்.ஆத்மாவே ஆனந்த ஸ்வரூபம். ஆனந்தத்தை  நாடி வேறு பொருள்களைத் தேடி மனதை அலைய விடக் கூடாது. அத்தகைய நாட்டம் காமம் எனப்படும்.
அலைகள் உண்டாகும்  பொழுது கடலின் அடி பாகம் தெரிவதில்லை. அது போல் காம அலை வீசும் பொழுது ஆத்மாவின் உண்மை சொரூபம் மறைந்து ஆனந்தம் இல்லாதாகிறது. உலகமெல்லாம் தேடி அலைகின்ற ஆனந்தம் நம்முள்ளே தான் இருக்கிறது என்று உணர்ந்து மனம் தெளிபவனே ஆத்ம ஞானி.
மீண்டும் பரமாத்மா கூறுகிறார்:

யதா சமாதே சாயம் கூர்மோ: ங்கானீவ ஸர்வச்: !!
இந்திரியாணீந்த்ரியார்த்தேப்யஸ்தஸ்ய ப்ரக்ஞா ப்ரதிஷ்டிதா !!

கூர்ம்மானது( ஆமை) ஆபத்து வரும் பொழுது தனது அவயவங்களை விரைவாக உள்ளே இழுத்துக் கொண்டுவிடும். அது போல் நாமும் இந்திரியங்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்து தக்க நேரத்தில் உள்ளே இழுத்துக்கொள்ள வேண்டும் அல்லது பரமாத்மாவின் மீது திருப்பிவிட வேண்டும்.

விஷயா வினிவர்த்தந்தே நிராஹாரஸ்ய தேஹின்: !
ரஸவர்ஜம் ரஸோப்யஸ்ய பரம் த்ருஷ்ட்வா நிவர்த்தே !!

ஆசைகள் நம் மனதில் கூத்தாடத் தான் செய்யும்.அதை யாராலும் தடுக்க முடியாது.முயற்சியினால் அவைகளை தீயிலிட்டு வறுத்த விதைகள் மாதிரியாக்க வேண்டும். தீயிலிட்டு வறுத்த விதை மீண்டும் முளைக்காது. ஆசையை வேர் அறுப்பதற்கு ஒரே வழி காணும் பொருளெல்லாம் பரம்பொருளே என்ற எண்ணம் ஏற்பட்டு விட்டால் சிற்றின்பத்தின் பால் நாட்டம் போகாது.
அதற்கு உதவ வேண்டும் என்று பகவான் அருணாசலரரிடம் கேட்டுக் கொள்வது தான் இந்த சுலோகம்:
கூர்வாட் கண்ணியர் கொடுமையிற் படாதருள்
கூர்ந்தெனைச் சேர்ந்தரு ளருணாசலா

வள்ளலார் திரு இராமலிங்க அடிகளார் இயற்றிய திரு அருட்பாவின் முதல் பகுதியில் மாயை வலிக்கழுங்கல் ஐந்தாம் அத்தியாயத்தில் முதல் இரண்டு செய்யுள்களில் மானிடரின் இழி நிலையை மிகவும் விளக்கமாக எழுதி ஆண்டவனின் அருளை கோருகின்றார். அதை இங்கே நினைவு கூருவது பொருத்தம் என்று நினைக்கிறேன்.

தாவு மானெனக் குதித்துக் கொண்டோடித்
தையலார்முலைத் தடம்படுங் கடையேன்
கூவுகாக்கைக்குச் சோற்றிலோர் பொருக்கும் கொடுக்க நேர்ந்திடாக் கொடியரில் கொடியேன்
ஓவுறாதுழல் ஈனப் பலகால் ஓடி ஒடியே தேடுறும் தொழிலேன்

சாவுறாவகைக் கென்செயக் கடவேன்
தந்தை யேஎனைத் தாங்கிக் கொண்டருளே.

போக மாதியை விழைந்தனன் வீணில்
பொழுது போக்கிடும் இழுதையேன் அழியாத்
தேகமாதியைப் பெறமுயன்றறியேன்
சிரங்கு நெஞ்சகக் குரங்கொடும் உழல்வேன்
காக மாதிகள் அருந்தஓர் பொருக்கும்
காட்ட நேர்ந்திடாக் கடையரில் கடையேன்
ஆகமாதிசொல் அறிவறி வேனோ
அப்ப நேஎனை ஆண்டுகொண்டடருளே

Description: https://ssl.gstatic.com/ui/v1/icons/mail/images/cleardot.gif

No comments:

Post a Comment