Friday 19 December 2014

ரமணஜோதி 30

வலிய ஆட்கொள்ளுதல்



கேளா தளிக்குமுன் கேடில் புகழைக்
கேடுசெய் யாதரு ளருணாசலா

அருணாசலா,நீ எல்லோருக்கும் உன் அருளைக் கேட்காமலேயே அளிப்பாய். அந்தப் புகழுக்கு களங்கம் வராமல் இருக்க வேண்டுமென்றால், எனக்கும் உன் அருளை தந்து விடு
என்கிறார் பகவான் ரமணர்.
பகவான் தனக்கு அருணாசலர் கேளாமல் அளித்த ஞானோபதேசத்தை நினைவுகூருகிறார் போலும்
பகவானின் வாழ்க்கையில் கேளாமல் கிடைத்த அனுக்கிரகங்கள் ஒன்ற இரண்டா?
ஒரு சிலதை நாம் இங்கே பார்ப்போமாக:
*      பகவான் திருச்சுழியில் இருக்கும் காலத்தில் வீட்டிற்கு வந்த பெரியவர் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் திருவண்ணாமலை என்ற பெயரை சொல்லவும் பகவான் அதை கேட்பதற்கும் இடையானது.
*      மதுரையில் இருக்கும் காலத்தில் திடீரென மரண பீதி உண்டானதும்,அதைத் தொடர்ந்து பகவானுக்கு ஏற்பட்ட அனுபவமும்
*      அருணாசலம் செல்ல வேண்டுமென்ற உந்தல் ஏற்பட்டது
*      ஏதோ ஒரு சிலவிற்காக அவரது தமையன் பகவானிடம் ஐந்து ரூபாய் கொடுத்தது
*      ஒரு இஸ்லாமிய பெரியவர் அவருடன் இரயிலில் பயணம் செய்ததும் அருணாசலம் செல்வதற்கான வழியை சொன்னதும்
*      வழக்கத்திற்கு மாறாக அவர் அருணை வந்தடைந்தபொழுது ஆலயக் கதவு மூடப்படாமல் இருந்தது
*      யாரிடமும் தீக்ஷை பெறவிடாமல் தகுந்த ஆதாரத்தைக் கொடுத்து தெளிவு படுத்தியது
இப்படி எத்தனையோ அடுக்கிகொண்டே போகலாம்.

கடைசியில் குறிப்பிட்ட சம்பவம் மிகவும் சிறப்பானது.
பகவான் இந்துமத சம்பிரதாயப்படி சன்யாசம் ஸ்வீகரித்ததில்லை என்பது எல்லாருக்கும் தெரியும். அது சம்பந்தமான ஒரு நிகழ்ச்சியை பகவான் பக்தர்களிடம் பகிர்ந்துகொண்டுள்ளார்.
பகவான் விரூபாக்ஷ குகையிலிருந்த காலத்தில் சிருங்கேரி மடத்திலிருந்து ஒரு சாஸ்திரிகள் பகவானப் பார்க்க வந்திருந்தார். பகவானிடம் வெகு நேரம் உரையாடிவிட்டு சாப்பட்டிற்கு போகும் முன் பகவானிடம் சென்று கை கூப்பி,சுவாமி,எனக்கு ஒரு விண்ணப்பம்; கருணை கூர்ந்து நிறைவேற்ற வேண்டும் என்றார்.
என்ன? என்று கேட்டார் பகவான்.
தாங்கள் பிராம்மணராக பிறந்தவர். சாஸ்த்ரோக்தமாக தீக்ஷை பெற்றுக் கொள்ள வேண்டாமா?----எங்கள் குரு பரம்பரையில் தங்களையும் சேர்க்க வேண்டுமென்று ஆவலாக உள்ளோம்-------.
தங்களுக்கு காவி வஸ்திரம் பூராவாகக் கட்ட இஷ்டமில்லாவிட்டால் கூட பரவாயில்லை. இந்த கௌபீனத்தையாவது காஷாயமாகத் தரித்தால் நல்லதென்று நினைக்கிறோம். மலையிறங்கிப் போய்ச் சாப்பிட்டுவிட்டு மூன்று மணிக்குத் திரும்பி வருகிறேன். நீங்கள் நன்றாக யோசித்து பதிலளிக்கலாம் என்று கூறிவிட்டு அவர் போய்விட்டார்.
அவர் போய்க்  கொஞ்ச நாழியைக்கெல்லாம் ஒரு வயதான பிராம்மணர் ஒரு மூட்டையை சுமந்து கொண்டு வந்தார்.
அவர் ரொம்ப நாள் பழகினவர் போல் சுவாமி,கொஞ்சம் இந்த மூட்டையைப் பார்த்துக் கொள்ளுங்கள்; நான் குளித்துவிட்டு வந்து விடுகிறேன் என்று சொல்லி விட்டு பதிலை எதிர்பாரமல் சென்று விட்டார்.
அவர் சென்றதுமே பகவானுக்கு மூட்டையிலிருக்கும் புத்தகத்தைப் பார்க்க வேண்டும் போல் தோன்றியது. மூட்டையை அவிழ்த்தால் மேலாக அருணாசல மாஹாத்மியம் என்ற சம்ஸ்கிருத கிரந்தம் இருந்ததாம்.புத்தகத்தை திறந்ததுமே ஸ்தல மஹிமையைப் பற்றி மஹேசுவரன் சொன்ன சுலோகமே கண்ணில்ப் பட்டது.
யோஜன த்ரயமாத்ரேஸ்மின் க்ஷேத்ரே நிவஸதாம் ந்ருணாம் !
தீக்ஷாதிகம் வினாப்யஸ்து மத்ஸாயுஜ்யம் மமாக்ஞ்யா !1!

இந்த அருணாசல க்ஷேதிரத்திற்கு மூன்று யொஜனை-24 மைல்களுக்குள் வசிப்பவர்களுக்கு தீக்ஷாதிகள் இல்லாமலேயே என் ஆணைப்படி என்னோடு ஒன்றுவதன் சாயூஜ்யம் கிடைப்பதாக..(அருணாசல மாஹாத்ம்யம் பூர்வார்த்தம் அத்.4,சுலோ. 25)
அந்த சுலோகத்தை காப்பி பண்ணி வைத்துக்கொண்டு சிருங்கேரி சாஸ்திரிகள் வந்ததும் பகவான் காண்பித்தார். அவரும் புரிந்துகொண்டு மேற்கொண்டு வறுப்புறுத்தாமல் பொய்விட்டார்.
 அந்த சுலோகம் பிற்பாடு அருணசல ஸ்துதி பஞ்சகத்தில் சேர்க்கப் பட்டுள்ளது
    
யோசனை மூன்றா மித்தல வாசர்க்
     காசறு தீக்கை யாதியின் றியுமென்
     பாசமில் சாயுச் சியம்பயக் கும்மே
     யீசனா மென்ற னாணையி னானே
இப்படி பலமுறை பகவான் நினையாமலே அருணாசலர் வழி காட்டியுள்ளார்.
நாம் திரும்ப விஷயத்திற்கு வருவோம்.
கேளாதளிக்கும் என்கின்ற பொழுது கேட்பவன் ஒருவன்,,பதிலளிக்க வேண்டியவன் இன்னொருவன் என்றாகிறது. பகவானின் அடிப்படை தத்துவம் கேள்வி கேட்பவனும் நானே,பதில் சொல்பவனும் நானே என்பதல்லவா? அப்படியிருக்கும்பொழுது உன் கேடில் புகழை என்று கூறுவதன் மூலம் அத்வைத சித்தாந்திற்கு முரணாக பகவான் கூறுகிறாரே என்ற சந்தேகம் நம்மில் சிலருக்கு எழலாம்.
பகவானின் இம்மாதிரியான சுலோகங்கள் சாதாரண மனிதர்களுக்கும் புரிய வேண்டும் என்பதற்காகவே இயற்றப்பட்டவை. ஆரம்பத்திலேயே ஞான மார்க்கத்திற்கு தாவ முடியாத சாமானியர்களும் புரிந்துகொண்டு ஆத்ம சாக்ஷாத்காரத்திற்கு முயல வேண்டும் என்பதற்காக பக்வான் பக்தி மார்க்கத்தின் சில யுக்திகளை கையாள்கிறர் என்று புரிந்து கொள்ளவேண்டும்
பக்தி மார்க்கத்திலும் பக்தனும் பகவானும் இரண்டற கலந்து ஒன்றாகி ஆத்ம சாக்ஷாத்காரம் நிகழும்
நாரத சூத்திரத்தில்  பக்தியைப் பற்றிக் கூறும்பொழுது  நாரத மஹிரிஷி சொல்கிறார்:

ஸத்யஸ்மின் பரமப்ரேமரூபா(சூ 2)

அதாவது பக்தி என்பது ஆழ்ந்த பற்றுதல் அல்லது அன்பு. அகாதமான பக்தி நிலையில் பக்தனுக்கும் பகவானுக்கும் இடையில் இடைவெளியே இராது. துவைதம் அல்லது இரட்டை நிலை தூய பக்தியில் காணாமல் போய்விடும்.

லலிதா சஹ்ஸ்ர நாமத்தில் ஓரிடத்தில் இப்படி கூறப்பட்டுள்ளது:

சிவோ பூத்வா சிவம் யஜேத் !

சிவனை பூஜை செய்ய்யும்பொழுது நாம் சிவனாகவே மாற வேண்டும்

இன்னொரிடத்தில் கீழ்க்கண்டவாறும் கூறப்பட்டுள்ளது:

அணிமாதிபிராவ்ருதாம் மயூர்வை ரஹமித்யேவ விபாவயே    பவானீம்

அன்னை பவானியை ஆராதிக்கும்பொழுது நாம் அன்னையாகவே மாறவேண்டும்

ஒரு முறை பரம சிவன்  மஹாவிஷ்ணுவிடம் பாடச் சொல்லி கேட்டுக் கொண்டாரம். திருமால் போட்ட ஒரே ஒரு நிபந்தனை வேறு யாரும் அங்கு இருக்கக் கூடாது என்பது தான்.
மஹாதேவனும் நிபந்தனைக்கு ஒத்துக் கொண்டார்.
திருமால் பாட ஆரம்பித்தார்.
பாட ஆரம்பித்த உடனையே அவர் ஒரு நீர் தேக்கமாக மாறிவிட்டார். பார்த்தால் பரம சிவனையும் காணோம்.அவர் நின்ற இடத்திலும் ஒரு நீர் தேக்கமே இருந்தது.
இரண்டு நீர்தேக்கங்களும் சிறிது நேரத்தில் ஒன்றாக கலந்து விட்டது.
ஆனால் தெய்வீக இசை மட்டும் நிற்கவில்லை அங்கு சிவனுமில்லை; விஷ்ணுவும் இல்லை.
ஆகவே தான் கபீர் தாஸ் பாடினார், இரண்டு ஆத்மாக்கள் பிரேமையில் கட்டுப் படும்பொழுது அவர்களிடையே இடைவெளியே இராது
ப்ரேம் கி கலி அதி ஸங்கரி தாமேன் தோ ஸமாய் !

துய பக்தியின் பாதை மிகவும் குறுக்கலானது அதில் இரண்டு பேர் சேர்ந்தார்ப் போல் நடக்க முடியாது. இருவரும் ஒருவராக வேண்டும்.

அதே போல் பக்தியில் யாதொருவிதமான எதிர்பார்ப்புக்களோ வேண்டுதல்களோ இருக்காது;இருக்கக் கூடாது.
ஸ்ரீமத் பாகவதத்தில் ஆறாம் ஸ்கந்தத்தில் வ்ரிடராஸுரா கடவுளிடம் சொல்கிறார்:

நாகப்ருஷ்டம் பாரமேஷ்ட்யம் ஸர்வபௌமம்
ரசாதிபத்யம் !
யோகசித்தீர்புனர்ப்வம் வா ஸமஞஸ த்வா விரஹ ய்ய காம்ஷே !1  (பா ஸ்க 6 அத் 2 சு 25)

 “எனக்கு சொர்க்க வாச ஆசை இல்லை; எல்லா அரசர்கள் மீதும் ஆதிகாரம் செலுத்தவும் ஆசை இல்லை; எனக்கு பிரம்ம லோகவும் வேண்டாம். எனக்கு எந்த விதமான யோக சித்திகளோ மறுபிறப்பிலிருந்து விடுதலையோ எதுவுமே வேண்டாம். எனக்கு நீ மட்டும் போதும் இது தான் பக்தி. நீவேண்டும் என்கின்ற ஆத்ம ஸாக்ஷாத்காரம் ஜீவாத்மா பரமாத்மாவுடன் ஒன்று சேருவது மட்டும் தான் உண்மையான பக்தியின் நோக்கம்
ஒருமுறை மஹா விஷ்ணுவிற்கு ஒரு பக்தன் கை விசிறியால் விசிறிக் கொண்டிருந்தான். பகவானுக்கு விசிறுவதில் அவனுக்கு சந்தோஷம் உண்டாயிற்று. உடனே பகவானுக்கு அது தெரிந்துவிட்டது. நீ விசிறினது போதும். வேறு யாரிடமாவது இந்தக் காரியத்தை ஒப்புவித்து விடு என்றார் பகவான்.
ஸா   காமயமானா நிரோதரூபத்வாத் !
(நா. சூ. 7)
இந்த இடத்தில் பக்தி மார்க்கமும் ஞான மார்க்கமும் சங்கமிக்கின்றது. ஞான மார்க்கத்திலும் எல்லா ஆசா பாசங்க்ளும் நசித்தால்த் தான் முக்தி கிடைக்கும் என்று சொல்லியுள்ளார்கள். பக்தி மார்க்கத்திலும் இதுவே தான் கூறப்ப்ட்டுள்ளது.

யதா ஸர்வேம் ப்ரமுச்யதே காமா யே ஷ்வாய ஹதி ஸ்ரீதா: !
அத: மர்த்யோம்ருதோ பவதி, அத்ர ப்ரம்ம ஸம்ஸ்ருதே !1
              (கடோபனிஷத்2-6)
யாரொருவன் அவ்வாறு ஆசைகளையெல்லாம் த்ய்ஜிக்கிறானோ (தியாகம் செய்கிறானோ) அவன் மட்டுமே இறப்பிலிருந்து விடுபட்டு ஆத்ம சாக்ஷத்காரம் அடைய முடியும் என்று கடோபனிஷத்தில் நமது முன்னோர்கள் கூறியுள்ளார்கள்.

அனன்ய பக்தி என்பது எந்த ஒரு குறிப்பிட்ட கடவுளின் மீது செலுத்தப் படுவதல்ல. அவரவர் நிலைமைக்கு தகுந்தபடி எந்த கடவுளை வேண்டுமென்றாலும் ஆராதிக்கலாம்,
சிவ மஹிமா ஸ்தோதிரத்தில்  ஏழாம் சுலோகத்தில் கீழ்க்கண்டவாறு கூறியுள்ளார்கள்:

ருசீனாம் வைசித்ரியாத் ருஜு குடில நானாபதஜுபாம் !
ந்ருணாமேகோ கம்யஸ்த்வமஸி பயஸாமர்ணவ இப !!

எல்ல விதமான பக்தியின் இலட்சியமும் ஒன்று தான் -.ஆத்ம ஸாக்ஷாத்காரம் கடவுளுடன் இரண்டறக் கலத்தல். இதுவே பூரண சரணாகதி எனப்படுகிறது.

அப்படிபட்ட பூரண சரணாகதியடைந்தவர்களுக்கு விருப்பம் ஏதும் இருக்காது. நான் அதுபோல் உன்னை பூரணசரணாகதி அடந்துவிட்டேன். எனக்கு எந்த விருப்பு வெறுப்பும் இல்லை.ஆகவே என்னை நீ ஏற்றுக்கொள். ஏற்றுக் கொள்ளாவிடில் நீ ஸர்வஞன்,ஸர்வ வ்யாபி, கருணைக்கடல் என்ற உன் புகழுக்கு களங்கம் ஏற்பட்டுவிடும்என்கிறார் பகவான் ரமணர்.
வலிய ஆட்கொள்ளுதல் என்பது உன் இயற்கை குணம். என்னை வலிய ஆட்க்கொண்டு எனக்கு ஆத்ம சாக்ஷாத்காரம் தருவாயாக” என்ற கருத்தை சூசகமகத் தெரிவிக்கிறார் பகவான் இந்த ஈரடிகளின் மூலம்
இந்த சந்தர்ப்பத்தில் பகவான் ரமணர் ஒருமுறை ஒரு பக்தனை வலிய ஆட்க்கொண்ட சம்பவம் ஞாபகத்திற்கு வருகிறது.
ஒரு முறை ஒரு பக்தர் பகவான் சன்னிதியில் விக்கி விக்கி அழ ஆரம்பித்தார்.
பகவானே,!நான் பாவியிலும் பாவி.தங்களிடம் எத்தனை வருடங்களாக வந்து கொண்டிருக்கிறேன்? இன்னும் நான் திருந்தவில்லை.மேலும் மேலும் இழி நிலக்கு இறங்கி வருகிறேன். எனக்கு விமோசனமே இல்லையா? என்று கதறி அழுதார்.
பகவான் இம்மாதிரி நேரங்களில் மௌனமாக இருந்து விடுவார்.
ஆனால் அன்று வழக்கத்திற்கு மாறாக ,அதற்கு ஏன் ஐய்யா இங்கு வந்து அழுகிறீர்? நான் என்ன உமக்கு குருவா?என்றார்.

அந்த பக்தரும் விடாமல், எனக்கு தாங்கள் தான் குரு,தெய்வம் எல்லாம். என்றார்.
பகவான் கருணை கூர்ந்து, சரி,அப்படியென்றால் எனக்கு என்ன குரு தக்ஷிணை கொடுப்பீர்? என்றார்.
சுவாமி,எது வேண்டுமானாலும் செய்ய தயாராயிருக்கிறேன் என்றார் அந்த பக்தர்.
பகவான் சிரித்துக்கொண்டே,சரி,அப்படியென்றால் உமது புண்ணியத்தயெல்லம் கொடும். என்றார்.
பக்தரோ, பகவாநே, இந்த பாபி,இது வரை எந்த புண்ணியமும் செய்ய்யவில்லையே? கொடுப்பதற்கு என்ன இருக்கிறது? என்றார்.
பகவான் விடவில்லை.நான் சொல்வதை திருப்பிச் சொல்லும். நான் இது வரை செய்துள்ள எல்லா நல்ல கர்மாவையும் என் குருவிற்கு அர்ப்பணம் செய்கிறேன்..’”சற்று அதட்டலாகவே பகவான் கூறினார்.
அந்த அடியாரும் அப்படியே கூறினார்.
பகவான் மீண்டும்கூறினார், நீர் செய்துள்ள அத்தனை பாவத்தையும் எனக்கு கொடும்,ஐயா.
அந்த ஹாலிலிருந்த அத்தனை பேரும் வெல வெலத்து போய்விட்டனர்.
அந்த அடியாரோ பயந்து போய், பகவானே,நான் ஒரு பெரும் பாவ மூட்டை.என்னுடைய பாவத்தை பகவான் ஏற்பதா? நான் மாட்டேன்.என்றார்.
பகவான், நீர் நம்மைப் பற்றிக் கவலைப் பட வேண்டாம்.பாவத்தையும் எமக்கு கொடுப்பதற்கு இஷ்டமில்லையென்றால் ,நீர் கொடுத்த புண்ணியத்தையும் எடுத்துக் கொண்டு வீடு போய் சேரும்.
பகவான் கூறினார், நான் கூறுவதை திரும்பக் கூறும். நான் செய்துள்ள பாவமெல்லாம் ரமணர் உடைமையே.’’
அடியாரும் வேறு வழியில்லாமல் அப்படியே கூறினார்.
பகவான் கூறினார்,  இந்த நிமிஷத்திலிருந்து உம்மிடம் நல்லதும் இல்லை;கெட்டதும் இல்லை.நீர் பரிசுத்தம் ஆகிவிட்டீர்.
இதுவே வலிய ஆட்கொள்ளுதலுக்குச் சிறந்த உதாரணமாகும். அந்த அடியார் யாரோ! மிகவும் புண்ணியம் செய்த ஆத்மாவாக இருக்க வேண்டும். பகவானின் எல்லையற்ற கருணைக்கு திடீரென்று பாத்திரமானார்.
ஆகவே பிராரப்த கர்மங்களின் அடிப்படையில் அந்த ப்ரமாத்மா கேட்காமலையே நமக்கு ஆத்ம சாக்ஷாத்கரம் அளிப்பர்.அவர் ஸர்வ ஞானி என்று பகவன் இந்த சுலோகத்தின் மூலம் விளக்கியுள்ளார்.
Description: https://ssl.gstatic.com/ui/v1/icons/mail/images/cleardot.gif





No comments:

Post a Comment